ஜம்மு: தென் காஷ்மீரின் ஷாப்பியன் பகுதியில் மீண்டும் ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
ANI தகவல்களின்படி, ஷாப்பியன் பகுதியில் உள்ள மருத்துவமனையின் இணைக்கப்பட்டுள்ள ATM(ஜெயின் வங்கி) அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது.
ATM-ல் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ATM வாயில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது, எனவே கொள்ளையர்கள் இதன் வழியாகவே சென்று கொள்ளையடித்திருக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர் என தெரிவித்தனர்.
எனினும் மக்களின் அச்சம் நீங்கவில்லை, காரணம் இச்சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக நடைப்பெரும் மூன்றாவது ஏடிஎம் கொள்ளை சம்பவம் ஆகும்.
J&K: Unknown people fled with an ATM Machine in Shopian's district hospital premises last night. More details awaited.
— ANI (@ANI) November 22, 2017
விரைவில் இக்கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாய் உள்ளது.