பைக் காப்பீடு எடுக்கும் முன்பே இந்த 5 முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்

பைக் காப்பீட்டு பாலிசி என்பது காப்பீட்டாளர் மற்றும் பைக் உரிமையாளருக்கு இடையேயான ஒப்பந்தமாகும். நீங்கள் பைக் பிரியர் என்றால், பைக் காப்பீட்டைப் பெறும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். 

Written by - ZEE Bureau | Last Updated : Apr 23, 2021, 09:54 AM IST
பைக் காப்பீடு எடுக்கும் முன்பே இந்த 5 முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்

Bike Insurance Tips: பைக் இன்ஷூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒரு சேவையாகும், ஆனால் பெரும்பாலும் மக்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஒருவேளை விபத்து ஏற்பட்டால், அவர்களால் முழு காப்பீட்டின் சலுகைகளையும் பெற முடியாது. அதற்காக காப்பீட்டு நிறுவனத்திற்கு அவர்கள் பலமுறை அலைய வேண்டியிருக்கும். அப்படி எதுவும் நடைபெறாமல் இருக்க சில வழிகளை உங்களுக்கு சொல்கிறோம். 

பைக் காப்பீட்டு பாலிசி என்பது காப்பீட்டாளர் மற்றும் பைக் உரிமையாளருக்கு இடையேயான ஒப்பந்தமாகும். நீங்கள் பைக் பிரியர் என்றால், பைக் காப்பீட்டைப் பெறும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே பைக் காப்பீடு தொடர்பான முக்கியமான விஷயங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள். 

பிரீமியர் கவரேஜ்: 
பைக் காப்பீட்டைப் பெறும்போது, ​​பெரும்பாலான பைக் பிரியர்கள் மலிவான பிரீமியத்தை நோக்கி செல்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பைக் காப்பீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் மலிவான பிரீமியம் வட்டத்தில் விழாதீர்கள். ஏனெனில் பைக்குக்கான காப்பீட்டு தொகையை கிளைம் பண்ணும் போது, அது பூஜ்ஜியமாக கூட இருக்கலாம். எனவே அதிக மதிப்புடைய திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ALSO READ | Lexmoto LXS 125 பைக் அறிமுகம், செம்ம ஸ்டைலீஷ் லுக்!

நீங்கள் மலிவான திட்டத்தை எடுத்திருந்தால், விபத்து ஏற்பட்டால், பைக்கின் முழு இழப்பும் நிறுவனத்தால் ஏற்கப்படும். அதேநேரத்தில் அதிக பிரீமியத்தில் அதிக மதிப்பு மற்றும் நன்மை கிடைக்கும். ஒருவேளை பைக் திருடப்பட்டால், நிறுவனம் உங்கள் பைக்கின் மதிப்புக்கு சமமான பணத்தை திருப்பித் தரும்.

சரியான முகவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: 
பைக் காப்பீட்டைப் பெறும்போது, ​​முழுமையான எச்சரிக்கையுடன் இருங்கள் மற்றும் பாலிசியின் மறைக்கப்பட்டு இருக்கும் அனைத்து அட்டைகளையும் உங்கள் முகவரிடம் கேளுங்கள். இதனால் நீங்கள் பின்னர் வருத்தப்பட வேண்டியதில்லை. எனவே ஒரு நிறுவனத்திற்காக மட்டுமே பணிபுரியும் ஒரு முகவரைத் தேர்வு செய்வதை விட, பல நிறுவனங்களுக்கு பணியாற்றும் ஒருவரை தேர்ந்தெடுங்கள். அவர் மட்டுமே ஒவ்வொரு நிறுவனத்தின் நன்மைகளையும் தீமைகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

கூடுதல் சேவை ஏற்ப திட்டம்:
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பைக் காப்பீட்டு திட்டத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட்டால்,  பைக்கின் இரும்பு பாகங்கள், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் ரப்பர் பாகங்கள் என தனித்தனியாக செலவை உள்ளடக்கும். இதில் உங்கள் பைக் விலை உயர்ந்ததாக இருக்கும்போது மிகப்பெரிய நன்மை இருக்கும். 

பைக் காப்பீட்டு தொகை ஒப்பீடு: 
உங்கள் பைக்கிற்கான எந்தவொரு காப்பீட்டையும் இறுதி செய்வதற்கு முன், குறைந்தது 5 நிறுவனங்களில் உள்ள திட்டத்தைப் பாருங்கள். ஏனென்றால், நீங்கள் ஒரு நிறுவனத்திடமிருந்து பாலிசி திட்டத்தை ரூ .1500 க்கு எடுக்கிறீர்கள் என்றால், அதே அம்சங்களை கொண்ட திட்டம் வேறுறொரு நிறுவனத்தில் ரூ. 1000 ஆகக் கூட இருக்கலாம். 

ALSO READ | Alert: நீங்கள் கட்டும் காப்பீட்டு பிரீமியம் 10 % அதிகரிக்கவுள்ளது, முழு விவரம் உள்ளே

பைக் காப்பீட்டு புதுப்பித்தல்: 
பைக் காப்பீட்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒரு பைக் விபத்து அல்லது திருட்டு ஏற்பட்டால் நீங்கள் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறுவீர்கள். ஆனால் அதன் இரண்டாவது மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் சாலை பைக் ஓட்டி செல்கிறீர்கள் என்றால், உங்களிடம் இரு சக்கர வாகன காப்பீடு இல்லையென்றால், போலீஸ் சோதனையில் இரண்டாயிரம் ரூபாய் சலான் விதிக்கப்படும்.  பைக் காப்பீட்டு திட்டம் உங்கள் 2000 ரூபாயையும் மிச்சப்படுத்துகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News