உலகில் இருக்கும் பணக்காரர்கள் அனைவரையும் சில நிற ஆடைகளை அணியவே மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் மார்க் சக்கர் பெர்கில் இருந்து, ஷாருக்கான் வரை பலர் இந்த கலர் கண்டீஷனை ஃபாலோ செய்கின்றனர். இவர்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலும், கெத்தான வைப்-ம் இருக்கிறது. அதை கெடுக்கும் வகையிலான நிறங்களை இவர்கள் அணியவே மாட்டார்கள். அது ஏன் தெரியுமா?
பேஸ்டல் ஷேட்ஸ்:
இப்போதையை ட்ரெண்டிங் ஆடையாக இருப்பது, பேஸ்டல் கலர்கள்தான். இருந்தாலும் அவை பலரால் விரும்ப படாத ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, தலைமை இடத்தில் இருப்பவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் இந்த நிற ஆடைகளை அணிவதே இல்லை. அதற்கு பதிலாக, நீலம், பச்சை, பர்கண்டி உள்ளிட்ட நிறங்களை தேர்ந்தெடுக்கின்றனர். இது, ஒரு வகையான நேர்த்தியான லுக்கை அவர்களுக்கு கொடுக்கிறது.
பல வண்ண-அச்சிட்ட உடைகள்:
பல வண்ணங்கள் பொருந்திய ஆடைகள், கடந்த சில ஆண்டுகளாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதிலும், அச்சிடப்பட்ட டிசைன் பொருந்திய ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உடுத்தப்படுகிறது. உலகளவில் பல கோடி பேர் இது போன்ற ஆடைகளை உடுத்துகின்றனர். ஆனால், பணக்காரர்களும், உயர் அதிகாரத்தில் இருப்பவர்களும், உடுத்த மாட்டார்கள்.
பளிச்சென்ற மஞ்சள்:
மஞ்சள் நிறம், பாசிடிவ் எனர்ஜி, விளையாட்டுத்தனம் மற்றும் மகிழ்ச்சியின் நிறமாக பார்க்கப்படுகிறது. ஆனால், உயர் பதவியில் அல்லது பணக்காரர்கள், இந்த நிற ஆடைகளை உடுத்துவதால் சிறுபிள்ளை தனமாக உணர்வார்களாம். எனவே, இந்த கலரை உடுத்தாத அவர்கள், எந்த முக்கிய நிகழ்ச்சி அல்லது மீட்டிங்கிற்கு சென்றாலும் தனக்கு நேர்த்தியாக பொருந்தும் கலரை தேர்ந்தெடுக்கின்றனராம்.
மேலும் படிக்க | புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸ்!
பளிச்சென்ற சிகப்பு:
பிரகாசமான சிவப்பு நிற ஆடையை உடுத்தியவர்கள், ஒரு அறையில் ஆயிரம் பேர் இருந்தாலும் தனியாக தெரிவர். இந்த நிறம் ஆதிக்கம், ஒரு வித ஆக்கிரமிப்பு உணர்வை தூண்டுவதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, தேவையற்ற கவனத்தையும் இவர்கள் பக்கமாக இந்த நிறம் திருப்பலாம். செல்வந்தர்கள், இந்த நிற ஆடையை உடுத்த பெரும்பாலும் விரும்ப மாட்டார்கலாம்.
நியான் ஷேட் நிறங்கள்:
இந்த வகை நிறங்கள் அனைத்துமே, கண்களை உறுத்தும் வகையில் ஒரு வகையான எரிச்சலை ஏற்படுத்துமாம். நியான் நிற ஆடைகள், அவற்றை அணிந்த நபரின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுக்கலாம். இந்த நிறம் ஒருவரை, அவர்கள் பளபளப்பாகவும், தொழில்சார்ந்தவர்கள் அல்லாத நிலையிலும் காண்பிக்கலாம். இதனால், இந்த நிற உடையை அணிபவர்கள் பெரிய இடத்தில் இருப்பவர்களுடன் பேசும் வாய்ப்பை இழப்பதாக கூறப்படுகிறது.
தங்க மற்றும் வெள்ளி நிறம்:
பல சிகப்பு கம்பள வரவேற்பில் இந்த நிற காம்பினேஷன் நிறைந்த ஆடையை யாரேனும் உடுத்தி, நடந்து வருவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இந்த தங்க நிற ஆடைகள் ஒருவரின் குணாதிசயத்தை பளிச்சென்று காட்டுவதை விட, அவரது தோற்றத்தை மட்டுமே பளிச்சென்று காண்பிக்கும். எனவே, செல்வந்தர்களாக இருப்பவர்கள், கொஞ்சம் தன்னை வெளியே காட்டாத நிற ஆடைகளைதான் தேர்ந்தெடுப்பார்களாம்.
மேலும் படிக்க | குண்டாக இருந்தாலும் பிடித்த உடையில் ஒல்லியா தெரியனுமா? ‘இதை’ பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ