உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் துளசி இலைகள் பற்றி தெரியுமா?

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல விஷயங்களை நாம் தினம் கடந்து சென்றுகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் நாம் தினமும் பார்த்து பயன்படுத்த மறுக்கும் ஒன்று தான் துளசி.

Last Updated : May 3, 2020, 02:54 PM IST
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் துளசி இலைகள் பற்றி தெரியுமா? title=

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல விஷயங்களை நாம் தினம் கடந்து சென்றுகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் நாம் தினமும் பார்த்து பயன்படுத்த மறுக்கும் ஒன்று தான் துளசி.

சைட்டோடாக்ஸிக் தொற்றுக்கு எதிராக, சைட்டோகைன்கள் NK (நேச்சர் கில்லர்) செல்கள் மற்றும் லிம்போசைட்டுகள் போன்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் பெற்றது துளசி. துளசி நோயெதிர்ப்பு-மாடுலேட்டரி கூறுகளைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.

ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, காய்ச்சலைக் குறைக்கவும், சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்கவும் இது உதவுகிறது. துளசியை பொதுவான வடிவத்தில் நுகர்ந்தாலும் சரி, சார்பு வடிவத்தில் நுகர்ந்தாலும் சரி அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் மிகவும் அதிகம்.

துளசி தேநீர் - ஒரு கப் சூடான நீரில் சில துளசி இலைகளை வைத்து குறைந்தது பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலிலிருந்து நிவாரணம் பெற ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த நீரை குடிக்கவும். இதன் மூலம் உடல் நலத்தில் பெரும் முன்னேற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.
 
துளசி பால் - உங்களுக்கு அதிக காய்ச்சல் இருந்தால், துளசி இலைகளை பாலில் கலந்து குடிக்கவும். துளசி பாலை தயாரிக்க துளசி இலைகள் மற்றும் ஏலக்காய் தூள் கலைவையை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இப்போது அதில் சர்க்கரை கலந்து குடிக்கவும். இதன் மூலம் உங்கள் காய்ச்சல் பறந்தோடும்.

துளசி சாறு - உடல் வெப்பநிலையைக் குறைக்க, நீங்கள் துளசி இலைகளின் சாற்றையும் குடிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆம், இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துளசி சாறினை தயாரிக்க 10-15 இலைகளை சிறிது தண்ணீரில் கலந்து ஊரவைக்கவும். பின்னர் இந்த சாற்றை குளிர்வித்து குடிக்கவும், அவ்வாறு செய்வதன் மூலம் பெரும் பயனடைவீர்கள்.

Trending News