30 நிமிட ஜாகிங் போதும்: உடல் ஆரோக்கியம் அட்டகாசமாய் இருக்குமாம்

Health Benefits Of Jogging: தூங்கி எழுந்தவுடன் தினமும் அரை மணி நேரம் ஜாக் செய்வது பல வித நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2024, 05:19 PM IST
  • ஜாகிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
  • எவ்வளவு நேரம் ஜாக் செய்ய வேண்டும்?
  • இந்த பதிவில் இதை பற்றி பார்க்கலாம்.
30 நிமிட ஜாகிங் போதும்: உடல் ஆரோக்கியம் அட்டகாசமாய் இருக்குமாம் title=

Health Benefits Of Jogging: நிம்மதியான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல் மிக அவசியமாகும். ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் மிக அவசியம். சீரான வாழ்க்கை முறையில் உடல் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. 

காலையில் பல வகையான உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதில் ஜாகிங்கும் அடங்கும். மெதுவான வேகத்தில் சீராக நாம் மேற்கொள்ளும் ஓட்டத்தை ஜாகிங் என கூறுகிறோம். இந்த கார்டியீவேஸ்குலர்  செயல்பாடு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

ஜாகிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? எவ்வளவு நேரம் ஜாக் செய்ய வேண்டும்? இந்த பதிவில் இதை பற்றி பார்க்கலாம். 

தூங்கி எழுந்தவுடன் தினமும் அரை மணி நேரம் ஜாக் செய்வது பல வித நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. 

30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

Cardiovascular Health: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

தினமும் தவறாமல் ஜாக் செய்தால், இதயம் மற்றும் நுரையீரல் சீராக செயல்படும். ஏனெனில் இந்த உடற்பயிற்சி இருதய அமைப்பை பலப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இதய தசைகளையும் பலப்படுத்துகிறது.

Weight Loss: எடை இழப்பில் உதவும்

ஜாகிங் கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். தினசரி 30 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் ஓடுவது உடல் எடை குறைக்க பெரிய அளவில் உதவும். இது உடல் எடை மற்றும் மற்றும் உடலின் ஆரோக்கிய நிலை போன்ற காரணிகளைப் பொறுத்து சுமார் 300-400 கலோரிகளை எரிக்க உதவும். ஜாகிங் செய்யும் போது நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் செயல்படுகின்றன. ஆகையால், இதன் மூலம் கூடுதல் கொழுப்பை எரிப்பதிலும், கலோரிகளை வேகமாக எரிப்பதிலும் பெரிய அளவில் உதவி கிடைக்கின்றது.

மேலும் படிக்க | பெண்ணின் கண்ணில் இருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

Stress Relief: மனநலம் மேம்படும்

ஜாகிங் பல மனநல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். ஜாகிங் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இவை பெரும்பாலும் 'ஃபீல்-குட்' ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது மனநிலையை மேம்படுத்தவும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

Immunity: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தொடர்ந்து ஜாகிங் செய்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். ஜாகிங் செய்வது ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது பல வகையான தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சளி போன்றவை ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புற்றுநோயாளிகளுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி... 99% குணப்படுத்தும் அற்புத சிகிச்சை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News