Pod Hotel: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் போட் ஹோட்டல் வசதி

இந்திய ரயில்வேயின் ஸ்லீப்பிங் பாட்ஸ் வசதி மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் தொடங்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 5, 2022, 09:00 PM IST
Pod Hotel: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் போட் ஹோட்டல் வசதி title=

மும்பை: இந்திய ரயில்வே CSMT இல் ஸ்லீப்பிங் பாட் ஹோட்டலைத் திறக்கிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தின் மெயின் லைனில் காத்திருப்பு அறைக்கு அருகில் இந்த போட் அமைந்துள்ளது என்று மத்திய ரயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் (CSMT) ஸ்லீப்பிங் பாட் ஹோட்டலைத் தொடங்கியுள்ளது. ஸ்லீப்பிங் பாட்ஸ் என்பது ஜப்பானில் உருவான ஒரு கருத்தாகும், இது பயணிகள் அதிக விலை கொடுக்காமல் ரயில் நிலையத்திலேயே ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.

"கட்டணமில்லா வருவாய் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய ரயில்வே புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருகிறது. இவை பயணிகளுக்குப் பலனளிப்பதோடு, ரயில்வேக்கு வருவாயையும் பெற்றுத் தருகின்றன. அந்த வகையில் தற்போது மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் பயணிகளுக்காக ஒரு Pod ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது" என்று மத்திய ரயில்வே அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

"சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் உள்ள Pod ஹோட்டல் புதிய புதுமையான கட்டணமில்லா வருவாய் வருமானத் திட்டத்தின் (NINFRIS) கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மும்பையில் பயணிகளுக்கு அதிக வசதியாகவும் விலை மலிவாகவும் தங்கும் விருப்பங்களை இது தருகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தின் மெயின் லைனில் காத்திருப்பு அறை" என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில்வே பயணிகளுக்கு மிகப்பெரிய செய்தி, IRCTC புதிய விதி அமல்

இந்த தங்கும் அறையில், 30 ஒற்றைக் அறைகள், 6 இரட்டை அறைகள், 4 குடும்ப அறைகள் என மொத்தம் 40 அறைகள் உள்ளன. குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியாக Pod Hotelகள் அமைக்கப்படுகிறது. இங்கு, மொபைல் சார்ஜிங் வசதி, லாக்கர் அறை வசதி, ஃபயர் அலாரம், இண்டர்காம், டீலக்ஸ் டாய்லெட் & பாத்ரூம் போன்ற வசதிகளும் உண்டு. நேரடியாக வந்தும், மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் முறையிலும் இந்த போட் ஹோட்டல்களுக்கு பதிவு செய்யலாம்.

கட்டணங்கள் தவிர பிற வகைகளில் வருவாயை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரயில்வே, ஹைப்ரிட் OBHS ஒப்பந்தங்கள், டிஜிலாக்கர்ஸ், பர்சனல் கேர் சென்டர்கள், இ-பைக்குகள், இ-சார்ஜிங் புள்ளிகள், போன்ற பல்வேறு கட்டணமில்லா முறையில் வருமானம் ஈட்டுகிறது. 

பயணிகளுக்கு பயனளிப்பதோடு, ரயில்வேக்கு வருவாயைப் பெற்றுத் தரும் இதேபோன்ற முயற்சியை கடந்த ஆண் ஐஆர்சிடிசி மும்பை சென்ட்ரல், மேற்கு பகுதியில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் இத்தனை தீமைகளா, அசர வைக்கும் தகவல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News