சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் இத்தனை தீமைகளா, அசர வைக்கும் தகவல்

Disadvantages Of Drinking Water After Meals: கோடைக்காலத்தில் தாகம் அதிகமாகும், அதனால் அதிக தண்ணீர் அருந்துகிறோம், ஆனால் பல நேரங்களில் தவறான நேரத்தில் தண்ணீர் குடிப்பது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 12, 2022, 08:05 AM IST
  • சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது
  • உடல் நலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்
  • உடல் கொழுப்பு அதிகரிக்கும்
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் இத்தனை தீமைகளா, அசர வைக்கும் தகவல் title=

நமது ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும், உணவுடன் அல்லது உடனடியாக தண்ணீர் குடிப்பதால் அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பவர்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா?
உணவை ஜீரணிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள், இதற்கிடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கிறது. அதனால்தான் உணவு உண்ட 45-60 நிமிடங்களுக்குப் பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள் 

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதால் எடை கட்டுக்குள் இருக்கும்.
2. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சரியாகும், செரிமான அமைப்பு வலுவாக இருக்கும்.
3. வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை நீங்கும்.
4. உணவில் இருக்கும் சத்துக்களை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ளும்.
5. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதும் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
* உடல் பருமன் பிரச்சனை ஏற்படும்
* செரிமான பிரச்சனைகள் ஏற்படும்
* உயர் இரத்த சர்க்கரை அளவு பிரச்சனை ஏற்படும்
* வயிற்று வாயு பிரச்சனை ஏற்படும்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News