இரவு நேர தனிமையான பயணத்தில் இளம்பெண்கள் மற்றும் மகளிர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக மும்பையில் புதுவகை கால் டேக்ஸி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பெண்கள் மற்றும் மகளிர் தனியாக ஒரு நீண்ட பயணத்திற்குச் செல்லும் போதெல்லாம், குடும்ப உறுப்பினர்கள் அவர்களது பாதுகாப்பைப் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள், இரவில் பயணம் செய்ய வேண்டுமானால், கவலை ஒரு ஆபத்தான நிலையை அடைகிறது. ஏனென்றால், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது துவங்கி, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற சம்பவங்களில் டாக்ஸி ஓட்டுநரின் பெயர் வந்தபோது இதுபோன்ற வழக்குகள் பல முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இருப்பினும், மும்பையில் இந்த நடைமுறையினை மாற்றுவதற்காக வேறு வகையான டாக்ஸி சேவை தொடங்கப்படுகிறது.
பிப்ரவரி 1 முதல் மும்பையில் Palki Cab வண்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது, இந்த வண்டிகளை GPS லைவ் டிராக்கருக்கு CCTV கேமரா வசதியைக் கொண்டிருக்கும். அதாவது உங்கள் வண்டி எங்கிருக்கிறது, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அறிந்து கொள்ள ஏதுவான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 டாக்சிகளுடன் தொடங்கப்படும் இந்த Palki கேப்ஸ் சேவை நாட்டை திரும்பிபார்க்க வைத்துள்ளது எனலாம்.
ஊடகங்களுடன் பேசிய Palki கேபின் நிறுவனர் பிரபுல்லா ஷிண்டே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், உடல் ரீதியான அல்லது எந்தவிதமான துஷ்பிரயோக சம்பவங்களையும் தடுப்பதற்கும், வண்டியில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும் இது உதவும் என்று கூறியுள்ளார்.
தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க, நிறுவனம் கேமராக்களை மட்டுமல்லாமல் GPS லைவ் டிராக்கர்களையும் நிறுவியுள்ளது. எந்த உதவியுடன் பயணிகளின் நேரடி இருப்பிடத்தையும், வண்டியின் உள்ளே நடக்கும் ஒவ்வொரு சிறிய பெரிய செயலையும் பதிவுசெய்யும் வசதி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.