PUBG விளையாட அனுமதிக்காத கணவரை விவாகரத்து செய்த பெண்!!

தனது கணவர் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் கணவரை விவாகரத்து செய்ய கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : May 2, 2019, 02:51 PM IST
PUBG விளையாட அனுமதிக்காத கணவரை விவாகரத்து செய்த பெண்!! title=

தனது கணவர் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் கணவரை விவாகரத்து செய்ய கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் சில மொபைல் விளையாட்டுகளில் PUBG என்ற மொபை விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் விசித்திரமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் நகரின் காவல்துறையில் 20 வயதைக் கடந்த பெண் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘தனது கணவர், நான் பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதி மறுக்கிறார். அதனால், தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். எனக்கான பொழுதுபோக்கை தீர்மானிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான், அளவுடன்தான் பப்ஜி விளையாட்டு விளையாடுகிறேன். எனக்கு, போனில் சேட் செய்வது பிடிக்காது. என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, ‘அந்தப் பெண் விளையாட்டில் அடிமையாகிவிடக் கூடாது என்று எண்ணி அவரின் கணவன் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுதான் இவர்களுக்கிடையேயான பிரச்னைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர்.

 

Trending News