வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து இனி நேரடியாக பணம் கொடுக்கும் அவசியம் இல்லை...!
சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. இதை கண்டித்து இன்று நாடு தழுவிய பாரத் பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, நமது வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக பணம் பெறப்படுகிறது. அந்த முறையையால் பல சர்சைகை மற்றும் குற்றங்களை தெரிவித்து வந்தனர். சிலிண்டர் வினியோகஸ்தர்கள் சிலிண்டருக்குரிய பணத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்ததற்கு மறைமுக சேவை கட்டணமாக கூடுதல் பணமும் பெறுகின்றனர். இது குறித்த புகார்கள் எண்ணை நிறுவனத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
அதை தடுக்கவே ‘இ-வேலட்’ எனப்படும் புதிய ஆன்லைன் பணம் பரிவர்த்தனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளது. சிலிண்டர் ‘புக்’ பண்ணும் போது அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு தகவல் அனுப்பப்படுகிறது. அதை ஒரு சில வினியோகஸ்தர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றனர். அனைவரும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே அதை விரைவில் கட்டாயமாக்க எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளது.