இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் 'mPassport Police App'-ஐ வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று (பிப். 17) அறிமுகப்படுத்தியது. இனி, இந்த செயலி போலீஸ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு அறிக்கையின் முழு
செயல்முறையையும் காகிதமற்றதாக மாற்றும் என்று வெளிவிவகார அமைச்சகத்தின் டெல்லியில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி RPO இன்று வெளியிட்ட ட்வீட்டில்,"இந்த அலுவலகம் திறமையான சேவை வழங்கல் மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்காக உறுதிபூண்டுள்ளது. mPassport செயலி, போலீஸ் சரிபார்ப்பு நேரத்தை 5 நாள்களாக குறைக்கும்.
ஆன்லைன் பாஸ்போர்ட் போலீஸ் சரிபார்ப்பு செயல்முறை
டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக, பாஸ்போர்ட் சேவா பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்க ஆன்லைன் பாஸ்போர்ட் போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தி mPassport என்பது பாஸ்போர்ட் சேவா உருவாக்கிய கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு டிஜிட்டல், டேப்லெட் மற்றும் கணினி அடிப்படையில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை போலீஸ் சரிபார்ப்பிற்கான ஆப் ஆகும்.
பாஸ்போர்ட் சேவா இணையதளம் மூலமாகவோ அல்லது mPassport மொபைல் செயலி மூலமாகவோ ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | Maha Shivratri: சிவனை துதித்தாலும் விரதத்தின்போது இந்த எச்சரிக்கைகளை மறக்கவேண்டாம்
ஆன்லைன் பாஸ்போர்ட் போலீஸ் சரிபார்ப்பை சமர்பிப்பதற்கான படிகள்:
- பாஸ்போர்ட் சேவைக்கான ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யவும்.
- போர்ட்டலில் உள்நுழைந்து, "Apply for Police Clearance Certificate" (காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும்) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு சமர்ப்பிக்கவும்.
- ஆப்பாய்மெண்டை திட்டமிடுவதற்கும் உங்கள் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் "View Saved/Submitted Applications" திரையில் தோன்றும் ஆப்ஷனில், "Pay and Schedule Appointment" என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பணம் செலுத்துதல் வெற்றியடைந்ததும், "Print Application Receipt" என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ரசீதுக்கான எஸ்எம்எஸ் வரும் வரை காத்திருக்கவும். அதை நீங்கள் அச்சிடுவதற்குப் பதிலாக மொபைலியே காட்டவும் செய்யலாம்.
- உங்கள் அப்பாண்ய்மெண்ட் திட்டமிடப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்குச் செல்லவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்லவும்.
ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் சரிபார்ப்பு நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
உங்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம், உங்கள் பாஸ்போர்ட்டின் நிலை மற்றும் சரிபார்ப்புக்கு ஏற்ப காவல்துறையால் லேபிள் வழங்கப்படும். உங்கள் பாஸ்போர்ட் பெறக்கூடிய 3 லேபிள் வகைகள் உள்ளன. அவற்றில் முழுமையானது, பாதகமானது மற்றும் முழுமையற்றது என்ற லேபிள்களாகும். போலீஸ் சரிபார்ப்பின் நிலை மற்றும் செயல்முறைகளை எவ்வாறு திருத்துவது அல்லது விரைவுபடுத்துவது என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் காவல் நிலையத்தை அணுகலாம்.
உங்கள் பாஸ்போர்ட்டின் நிலையை 4 வசதியான வழிகளில் சரிபார்க்கலாம்:
- பாஸ்போர்ட் சேவா இணையதளம்
- இலவச எண் 1800 258 1800.
- 9704 100 100 என்ற எண்ணிற்கு ‘Status File Number’எஸ்எம்எஸ் செய்யவும்
- mPassport சேவா மொபைல் ஆப்
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ