Isha Foundation: கலாச்சாரத்தை பாதுகாக்க Samskriti திட்டம் அறிமுகம்

Project Samskriti திட்டத்தின் கீழ், இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தற்காப்பு கலைகளை வழங்குவார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2021, 06:05 PM IST
  • Project Samskriti திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார் ஈஷா
  • குரு பூர்ணிமா நிகழ்ச்சிகள் ஆன்லைனில் நடைபெற்றன.
  • சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்
Isha Foundation: கலாச்சாரத்தை பாதுகாக்க Samskriti திட்டம் அறிமுகம் title=

சென்னை: குரு பூர்ணிமா நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை மெய்நிகர் நிகழ்வாக நடத்தியது. நிகழ்ச்சியில் ஆன்லைனில் கலந்துக் கொண்ட சத்குரு, கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக Project Samskriti என்ற திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

ஈஷா சம்ஸ்கிருதி வருங்கால தலைமுறைகளுக்கான சிறந்த அர்ப்பணிப்பு ஆகும். சிறந்த சுற்றுப்புறச்சூழலில் குழந்தைகள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்தி வளர்வதோடு, அவர்கள் தங்களை சுற்றியுள்ள உலகிற்கு பங்காற்றும் விதமாக இந்தப் பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Project Samskriti திட்டத்தின் கீழ், இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தற்காப்பு கலைகளை வழங்குவார்கள். இந்த கலைகளின் முழுநேர பயிற்சியை சுமார் 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இளைஞர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்பார்கள்.

7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஈஷா சம்ஸ்கிருதியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இக்கல்விமுறையில், குழந்தைகளின் இயல்பான திறமைகளை வெளிப்படும். தகுந்த சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு உருவாக்கித் தந்து, வாழ்க்கை குறித்த உள்நிலை புரிதலை பெறும் வகையில் சம்ஸ்கிருதி பள்ளியின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மந்திரங்கள், பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கலரி பயட்டு போன்ற தற்காப்புக் கலைகள் ஆன்லைனில் நிகழ்த்தப்படும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் சமஸ்கிருத இணையதளத்தில் கிடைக்கும்.

இந்திய கலாச்சாரத்தில், பாரம்பரிய கலை வடிவங்களின் நடைமுறை எப்போதும் ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கலைகள் பக்தியில் வேரூன்றியுள்ளன, அவை பெரும்பாலும் பொழுதுபோக்காக அல்லாமல் தெய்வீகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை மனிதர்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காக உருவாகியுள்ளன.

Also Read | கார்த்திகை தீபத் திருநாளில் ஒளிரும் ஈஷா மையம், in pics

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஈஷா அறக்கட்டளையின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. ஈஷாவின் குரு பூர்ணிமா கொண்டாட்டங்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் சத்குரு உரையாற்றினார். சத்குருவால் வழிநடத்தபப்ட்ட தியானம், ஈஷா சமஸ்கிருதி பள்ளியின் மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்திய ஆன்மீக நாட்காட்டியில் மிக முக்கியமான நாள் குரு பூர்ணிமா. முதல் யோகியான ஆதியோகி தனது போதனைகளை செய்வதற்காக ஆதிகுரு அல்லது முதல் குருவாக மாறிய நாள் இது.  

Also Read | கிராமி விருது விழாவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த ஈஷா மஹாசிவராத்திரி விழா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: http

Trending News