கியூபா நாட்டின் அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு!

கியூபா நாட்டின் அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Apr 20, 2018, 07:01 AM IST
கியூபா நாட்டின் அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! title=

கியூபா நாட்டின் அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

கியூபா-வின் அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதையடுத்து, நாட்டின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக கியூபாவின் அதிபராக இருந்த பிடில் காஸ்ட்ரோ, கடந்த 2006-ஆம் ஆண்டு தனது சகோதரான ரால் காஸ்ட்ரோவை அதிபராக நியமித்தார்.

இதனையடுத்து சுமார் 12 ஆண்டுகளாக ரால் காஸ்ட்ரோ அதிபர் பதவியில் நீடித்து வந்த நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, கியூபாவின் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து, துணை அதிபராக இருந்த, ரால் காஸ்ட்ரோ-வின் ஆதரவாளர் மிக்வெல் டயாஸ், அதிபர் பதவிக்கு ரால் காஸ்ட்ரோவால் முன்னிறுத்தப்பட்டார்.

டயாஸை எதிர்த்து வேறு யாரும் வேட்பாளராக நிறுத்தப்படாத காரணத்தால் மிக்வெல் டயாஸ் புதிய அதிபராக தேர்வு அறிவிக்கப்பட்டார்.

Trending News