இந்த மாதம் முதல் வாரத்தில் இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர். இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் என ஹசின் ஜகான் செய்தியாளரிடம் கூறியிருந்தார்.
முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும் -மனைவி ஆவேசம்
இதற்கு முகமது ஷமி, என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும் முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
முகமது ஷமி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த மனைவி ஹசின் ஜகான்
இதனையடுத்து, முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்ததாகவும், மேலும் பல பெண்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளது எனவும், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் பேச்சை கேட்டு கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். மேலும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இதைக்குறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என் மனைவி (ஹசின் ஜகான்)-ன் குற்றச்சாட்டு பொய்யானது: முகமது ஷமி!
கடந்த 25-ம் தேதி டேராடுனில் இருந்து டெல்லி திரும்பியபோது முகமது ஷமியின் கார் ஒரு டிரக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷமி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சாலை விபத்தில் சிக்கிய முகமது ஷமி!
இதை கேள்விப்பட்ட ஹசின் ஜகான், முகமது ஷமியை பார்க்க டெல்லி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் தன் மகளையும் அழைத்து கொண்டு சென்றார்.
இதைக்குறித்து செய்தியாளர்களிடம் ஹசின் ஜகான் கூறியது, முகமது ஷமி தன்னை பார்க்க மறுத்து விட்டார். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என கூறினார். ஆனால் எங்கள் குழந்தையுடன் அவர் பேசினார், விளையாடினார். அவர் என்னை எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என் கணவர். அதனால் தான் அவரை பார்க்க வந்தேன். அவர் சீக்கிரம் குணமடைய கடவுளை பிராத்திக்கிறேன் எனக்கூறினார்.