கர்ப்பமான பின் காதலருடன் நிச்சயம் செய்துகொண்ட பிரபல நடிகை!

தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை எமி ஜாக்சனுக்கு தற்போது தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

Updated: May 6, 2019, 12:55 PM IST
கர்ப்பமான பின் காதலருடன் நிச்சயம் செய்துகொண்ட பிரபல நடிகை!

தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை எமி ஜாக்சனுக்கு தற்போது தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள எமி கடந்த புத்தாண்டு தினத்தில், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.மேலும் தனது காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது எமிக்கும், காதலரான ஜார்ஜ் பனாயிட்டோவுக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.