விஜய்தான் சூப்பர் ஸ்டார் - கொளுத்திப்போட்ட பத்திரிகையாளர்; முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்

விஜய்தான் சூப்பர் ஸ்டார் என பத்திரிகையாளர் கூறியதை அடுத்து அவரது வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 1, 2023, 05:58 PM IST
  • விஜய்தான் நம்பர் 1 என தில்ராஜு பேசியிருந்தார்
  • பத்திரிகையாளர் பிஸ்மி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றார்
  • அவரது வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டனர்
 விஜய்தான் சூப்பர் ஸ்டார் - கொளுத்திப்போட்ட பத்திரிகையாளர்; முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் title=

துணிவா, வாரிசா என பிரச்னை புகைந்துக்கொண்டிருந்த சூழலில் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு, தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1 என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யார் நம்பர் 1 என்ற பிரச்னையை விஜய் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பேச்சும் ஒருவகையில் அஜித் தனக்கு போட்டியே இல்லை என்பதை உணர்த்தும் விதமாகத்தான் இருந்தது. அதே நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “ விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறினேன்” என்று அவர் கூறியிருந்தார்.

இதனால் மீண்டும் அந்த பிரச்னை தலைதூக்கி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விஜய்தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். இதனை தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் பத்து பேர் பத்திரிகையாளர் பிஸ்மியின் வீட்டுக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரஜினி குறித்து யூடியூபில் பேசிய காணொலிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா பத்திரிகையாளரின வீட்டுக்கே சென்று ரஜினி ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vijay

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒன்று தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சிங் சத்தா படத்தில் சிறப்பு வேடம் ஆகும். அடுத்தாக லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் துணிவின் சாதனை - ஆச்சரியத்தில் கோலிவுட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News