இன்று வெளியிடப்படும் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' டீசர்!!

இன்று கஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Jan 11, 2018, 08:31 AM IST
இன்று வெளியிடப்படும் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' டீசர்!!  title=

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். 

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில், இன்று கஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

 

Trending News