விஜய்க்கு நன்றி சொன்ன ஜெய்!

Last Updated : Nov 5, 2017, 09:51 AM IST
விஜய்க்கு நன்றி சொன்ன ஜெய்! title=

நடிகர் விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. உலகளவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். சினிமா துறையினரும் நடிகர் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். 

கடந்த 2002-ம் ஆண்டு விஜய், ஜெய், ரீமாசென், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான 'பகவதி' படம் வெளிவந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறவடைகிறது. பகவதி படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தனர்.

அப்படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்திருப்பார் ஜெய். விஜய் டீக்கடை நடத்தி தம்பி ஜெய்யை படிக்க வைப்பார். ஜெய்யின் அறிமுகப் படமும் இதுதான்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய் தனது டிவிட்டர் பக்கத்தில், 'எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி', விஜய் அண்ணா 'என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை'  எனக் பதிவிட்டுள்ளார்.

 

Trending News