விஜய் சேதுபதி, சூர்யா நடித்துள்ள நவரசா, ரிலீஸ் அப்டேட் இதோ!

நவரசா ஆந்தாலஜி வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 28, 2021, 02:56 PM IST
விஜய் சேதுபதி, சூர்யா நடித்துள்ள நவரசா, ரிலீஸ் அப்டேட்  இதோ!

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கி உள்ள ஆந்தாலஜி வெப் தொடர் நவரசா. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார்.  இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் நவரசா (Navarasa) ஆந்தாலஜி வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மேலும் இதில், சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ALSO READ | 17 மொழிகளில் அதிரடியாக வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்!

இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாக இருக்கும் நவரசா என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News