Actor Raghava Lawrence : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சமீபத்தில் நடந்த பத்திரிக்கை சந்திப்பில் கூறியது போலவே தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டி அன்பளிப்பாக தந்து அசத்தியுள்ளார்.
மாஸ்டர் ராகவா லாரன்ஸ் (Mater Raghava Lawrence) தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே! அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர்.
Hatsoff @offl_Lawrence Sir
தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கி வரும் #கை_கொடுக்கும்_கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனம் பரிசளித்தார் மாஸ்டர் #ராகவா_லாரன்ஸ் .#RaghavaLawrence pic.twitter.com/879dQ28jLO
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) April 18, 2024
மேலும் படிக்க | பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!
அது போல் தற்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு அதனை முறையாக கற்றுக்கொண்டு அசத்தி வருகின்றனர். இவர்களை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கை ஊடக சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்து பேசும்போது.,
நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருப்பதாக சொன்னார்கள் அது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது அதனால் இவர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வாங்கி தரவிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று பேசியிருந்தார்.
Hi friends and fans, Two days ago in a press meet I mentioned that my physically abled boys performed Mallarkhambam so courageously. I’m extremely proud and happy to see their determination and hard work. I promised to provide them with bikes and build houses for them. As a first… pic.twitter.com/3iTO9spRIQ
— Raghava Lawrence (@offl_Lawrence) April 17, 2024
இதனைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டில், மாற்றுத்திறனாளி குழுவினரைச் சந்தித்து பாராட்டியதோடு, சொன்னது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டி வழங்கி அசத்தியுள்ளார். தன்னலமற்ற உதவிகளை செய்து வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸை அனைத்து தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ