கேக் பேசியலுக்கு நன்றி - ரகுல் பிரீத்தி சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!

படக்குழுவினருடன் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரகுல் பிரீத் சிங்

Written by - ZEE Bureau | Last Updated : Oct 10, 2021, 04:54 PM IST
கேக் பேசியலுக்கு நன்றி - ரகுல் பிரீத்தி சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!

'தடையறத் தாக்க' என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானவர். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரகுல் பிரீத் சிங் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ரகுல் தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' என்கிற ஒரு அருமையான திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று தனது 31-வது பிறந்தநாளை தனது படக்குழுவினருடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது ரகுலுக்கு மகிழ்ச்சியை அளித்தது .

rakul

சர்ப்ரைஸாக படக்குழுவினர் நேற்று மாலை இவருக்காக இந்த பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டு பெரிய அழகிய சுவையான கேக்குகளை வெட்டி தனது பிறந்தநாளை குழுவினருடன் கொண்டாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் .

அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'cake facial by @sidharthmalhotra' என்கிற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.இவரது பிறந்தநாளுக்கு நண்பர்கள்,சினிமா வட்டாரங்கள்,உறவினர்கள்,ரசிகர்கள் என அணைத்து தரப்பிலிருந்து பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

ALSO READ முட்ட கண்ணு முழி அழகு! ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News