தல-57: அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடக்கம்

Last Updated : Jul 27, 2016, 05:26 PM IST
தல-57: அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடக்கம்

அஜித் நடிக்க இருக்கும் அவருடைய 57-வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்க இருக்கின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிபில் சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.  

தயாரிப்பாளர்கள் தரப்பில் பல்கேரியாவில் சூட்டிங் நடத்த 40 நாட்கள் திட்டமிடபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. படபிடிப்பை முடித்து கொண்டு அதன் பிறகு 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு இறுதி கட்ட பணிகள் தொடங்கும். இந்த படம் 2017 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories

Trending News