‘விவேகம்’ டீசரின் புதிய சாதனை: 1 கோடி பார்வையாளர்களை பெற்றது

Last Updated : May 14, 2017, 12:06 PM IST
‘விவேகம்’  டீசரின் புதிய சாதனை: 1 கோடி பார்வையாளர்களை பெற்றது  title=

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. 

இந்த படத்தில் விவேகம் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழனன்று நள்ளிரவு 12.01-க்கு வெளியான ‘விவேகம்’ படத்தின் டீசர் வெளியாகிய 68 மணிநேரத்தில் 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. 

‘கபாலி’ டீசர் வெளியாகி 3 நாட்களில் படைத்த சாதனையை ‘விவேகம்’ டீசர் 68 மணிநேரத்திலேயே படைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அஜித் பட டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Trending News