கொரோனா தொற்று இன்னும் ஓயவில்லை. அனைத்து சுகாதார நிறுவனங்களும் அதன் தீவிரத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றன. கொரோனாவின் பல அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அதிகம் விவாதிக்கப்படாத ஒரு அறிகுறி உள்ளது. தற்போது உலக சுகாதார நிறுவனம் இந்த அறிகுறியை தீவிரமானது என்று விவரிக்கும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் இந்த தீவிர அறிகுறியைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
கொரோனாவின் புதிய அறிகுறிகள் வெளிப்பட்டன
'தி மிரர்' அறிக்கையின்படி, என்ஹெச்எஸ் இன் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் கொரோனா வைரஸின் அறிகுறி தென்படவில்லை , ஆனால் உலக சுகாதார அமைப்பு இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சளி, தொடர்ந்து இருமல், வாசனையின்மை அல்லது சுவை இழப்பு ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மூச்சுத் திணறல், உடல் நலக்குறைவு, சோர்வு, வலி, தொண்டை வலி, தலைவலி, மூக்கில் நீர் வடிதல், பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படாத ஒரு அறிகுறி மயக்கம் ஆகும். நோய் கட்டுப்பாடு மையங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு இரண்டும் கொரோனா வைரஸின் அறிகுறியாக பிரம்மையை பட்டியலிட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின் கீழ், பிரம்மை ஒரு 'தீவிர அறிகுறி' என்று பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட் நோயின் அறிகுறிகள்:
- கவனம் இன்மை
- சிந்தனை சிக்கல்
- குழப்பம்
- மறதி
- மனதளவில் சோர்வாக உணர்தல்
மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR