சந்தையில் களமிறங்க Audi A8L தயார்! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

ஆடி A8L ஃபேஸ்லிஃப்ட் சந்தையில் களமிறங்க தயாராகிவிட்டது. 2022 இல் இந்தியச் சந்தைகளிலும் கிடைக்கும்

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி, பிராண்டின் ஃபிளாக்ஷிப் செடானின் 2022 ஆடி ஏ8எல் ஃபேஸ்லிஃப்டை வெளியிட்டது. Audi A8 sedan கார் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, கூடுதல் அம்சங்கள் மற்றும் சீன சந்தைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட டாப்-டிரிம் ஆகியவற்றுடன் நுட்பமான ஃபேஸ்லிஃப்டைப் பெற்றுள்ளது. 

Also Read | கார் வாங்கப்போறீங்களா? பணத்துக்கு மதிப்பளிக்கும் டாப் 5 கார்கள்

1 /5

சீனாவிற்கான டாப் ஸ்பெக் டிரிம் ஆடி ஏ8 எல் ஹார்ச் என்று அழைக்கப்படுகிறது, இந்த கார் மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-கிளாஸ் ரக காருக்கு போட்டியாக இருக்கும். 340hp ஆற்றலை வழங்கும் 55 TFSI குவாட்ரோ V6 பெட்ரோல் எஞ்சினுடன் இந்தியாவில் Audi A8 L அறிமுகமாகும்.

2 /5

ஆடி ஏ8 புதிய எஸ் லைன் பேக்கேஜைப் பெறுகிறது, இதில் சைட் இன்டேக்களில் எஸ்8-இன்ஸ்பைர்டு பிளேடுகள், ஓஷனல் குரோம் மற்றும் கருப்பு வெளிப்புற பேக்கேஜ்கள் ஆகியவை அடங்கும். இதில் நான்கு புதிய மெட்டாலிக் மற்றும் ஐந்து புதிய மேட் ஷேடுகள் இருக்கும்.  

3 /5

ஆடி A8 காரின் பம்பரின் விளிம்புகளில் பரந்த கிரில்லுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது ஆடியின் டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்களையும் பெறுகிறது, டிஜிட்டல் ப்ரொஜெக்டரைப் போலவே ஒளியை தனிப்பட்ட பிக்சல்களாகப் பிரிப்பதற்காக, சுமார் 1.3 மில்லியன் மைக்ரோ-மிரர்களைப் பயன்படுத்துகிறது.  

4 /5

A8 L இன் கேபின் அதன் சமீபத்திய  மென்பொருளுடன் புதுப்பிக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகிறது. பின் இருக்கைகளில் இரண்டு 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் டச் ஸ்கிரீன் ரிமோட் கொண்டது

5 /5

என்ஜின் வரிசையில் ஆறு சிலிண்டர் 3.0 TDI டீசல் மற்றும் 3.0 TFSI பெட்ரோல் முறையே 286hp மற்றும் 340hp உற்பத்தி செய்கிறது. 461hp வெளியீடு மற்றும் 4.0 TFSI பெட்ரோல் கொண்ட TFSIe பிளக்-இன் ஹைப்ரிட் விருப்பமும் உள்ளது. அனைத்து என்ஜின்களும் எட்டு-வேக 'டிப்ட்ரானிக்' தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் ஆடியின் 'குவாட்ரோ' ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.