சகோதரருக்கு உகந்த நாளில் சனியின் ராசிக்கு பெயரும் சுக்கிரன்! வளம் தரும் சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்!

March 7 Planet Transit Venus : தெளிவு, தூய்மை, பிரகாசத்தின அடையாளமான சுக்கிர பகவான், அசுர குரு என்றழைக்கப்படுகிறார். தனது சகோதரரான குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கியான இன்று (மார்ச் 7) சுக்கிரன் சனியின் கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.  

சுக்கிரனின் இன்றைய கிரகப் பெயர்ச்சியானது அனைவருக்கும் வெவ்வேறுவிதமான பலன்களைக் கொடுக்கும். ஆனால், சுக்கிரன், குரு என்ற சகோதரர்களுக்கு இணக்கமான ராசிகளுக்கு இன்றைய பெயர்ச்சி எதிர்காலத்தை வளமாக்கும். சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்

1 /13

மார்ச் 7ஆம் தேதியான் இன்று காலை 10:55 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசிக்கு மாறுகிறார். மார்ச் 30ஆம் தேதி வரை இங்கு அவர் இருந்து ஆட்சி புரியும் காலகட்டத்தில், லட்சுமி தேவியின் ஆசி எந்தெந்த ராசிகளுக்கு உண்டு? தெரிந்துக் கொள்வோம். 

2 /13

சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் சூழ்நிலை மாறும். மனதிற்கு இனிய சம்பவங்களை ஏற்படுத்துவார் சுக்கிரன்

3 /13

கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும்

4 /13

 சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உருவாக்குவீர்கள்

5 /13

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும், ஏனெனில் இன்றைய சுக்கிர பெயர்ச்சியால் பண விரயம் ஏற்படலாம். ஒரு மாதம் கவனமாக இருந்தால், அடுத்த சுக்கிர பெயர்ச்சி அருமையாக இருக்கும்

6 /13

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும், சுக்கிரன் பெயர்ச்சியில் சில பாதகங்கள் இருந்தாலும் பண வரத்து குறையாது

7 /13

பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும், பண வரத்து சுமாராகவே இருக்கும்

8 /13

கன்னிக்கு சுக்கிரன் பலம் தருவதால், பணம் பற்றிய கவலை இல்லாமல் இலக்கை நோக்கி பயணிக்கலாம். எங்கிருந்தாவது பணம் வந்து கவலைகளை போக்கும், லட்சுமி கடாட்சம் உண்டு

9 /13

சிம்ம ராசியினருக்கு இன்றைய சுக்கிரப் பெயர்ச்சி நன்மைகளைத் தரும். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டுமே என்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வேலையை பாருங்கள். ஏனென்றால் இன்றைய சுக்கிர பெயர்ச்சி வராக்கடன்களையும் வரவைத்து திடீர் பண வரத்தைக் கொடுக்கும்

10 /13

சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைக்கு தேவையான பணம் எவ்வளவு முக்கியமானது என்பதை சுக்கிரப் பெயர்ச்சி புரிய வைத்து, வாழ்க்கையில் ஊக்கத்தை ஏற்படுத்தும்

11 /13

உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பை சுக்கிரன் கொடுப்பார், மனதில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும். பண வரத்து குறைவாகவே இருக்கும்

12 /13

உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும் என்றாலும் பதவி உயர்வும், சம்பள உயர்வையும் சுக்கிரன் அருள் கொடுக்கும். எனவே இந்த பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு நன்மை பயக்கும்

13 /13

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். லட்சுமி தேவியின் அருட்கடாட்சத்தை சுக்கிரன் வழங்குவார்