மற்ற நோய்களை போல நீரிழிவு நோயை முற்றிலுமாக சரிசெய்யாவிட்டாலும், சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் தினசரி உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
உடல் எடை விஷயத்தில் கவனமுடன் இருப்பது அவசியமானதாகும், நீங்கள் சில எடைகளை இழக்க வேண்டியதிருந்தாலும் அதனை செய்ய வேண்டும்.
ஜூஸ், எனர்ஜி பானங்கள், ஆல்கஹால் கலந்த பானங்கள் மற்றும் இன்னும் பிற இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும், செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது.
அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது நல்லது, ஆதனால் குளுக்கோமீட்டர், ரத்த அழுத்த மீட்டர் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது.
அதிக நார்சத்து நிறைந்த உணவை தினமும் சாப்பிட வேண்டும், அதேபோல சரியான நேரத்தில் உங்களுக்கான உணவை சாப்பிட வேண்டும்.