7 Indian States That Are Visited By Foreigners In 2024 : இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில், ஒரு சில இடங்களுக்கு மட்டும்தான் வெளிநாட்டினர் விரும்பி வந்திருக்கின்றனர். அவை, என்னென்ன மாநிலங்கள் தெரியுமா?
7 Indian States That Are Visited By Foreigners In 2024 : இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில், குறிப்பிட்ட 7 மாநிலங்களுக்கு வெளிநாட்டினர் தொடர்ச்சியாக விசிட் அடிக்கின்றனர். அதில், நம்ம ஊர்தான் டாப்பில் இருக்கிறது.
டெல்லி: டெல்லியில், பல்வேறு வரலாற்று சிரப்புமிக்க நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. இவை, வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் இந்திய மாநிலங்களில் 7வது இடத்தில் இருக்கிறது.
கோவா: கோவாவில் இருக்கும் கடற்கரை, அங்கிருக்கும் இரவு பார்டி லைஃப், வெளிநாட்டினருக்கு ஏற்றதாக இருப்பதால் அவர்கள் அங்கு அடிக்கடி விசிட் செய்கின்றனர்.
கேரளா: கேரளாவில் வெளிநாட்டினர் உள்பட பலர் ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கிருக்கும் ஆலப்பி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அதிகம் வெளிநாட்டினர் வருகின்றனர்.
ராஜஸ்தான்: ராஜஸ்தானில், உதய்பூர், ஜெய்பூர் உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டினர் அதிகம் விசிட் செய்யும் இடங்களாக இருக்கின்றன.
உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் இருக்கும் தாஜ் மகால், வாரணாசி உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டினர் அதிகம் வரும் இடங்களாக இருக்கின்றன.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா, வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் இரண்டாவது இந்திய மாநிலமாக இருக்கிறது.
வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் முதல் இந்திய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாடு. மெரினா கடற்கரை, கோயில்கள் என சுற்றிப்பார்க்கும் பல இடங்கள் இருக்கின்றன. இதனால், தமிழகம் வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் மாநிலங்களில், இந்த ஆண்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.