மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை கூட்ட 8 கிரியேட்டிவ் வழிகள்!!

Creative Ways To Reduce Stress And Feel Happy: தற்போதைய பரபரப்பான உலகில், பலரும் மகிழ்ச்சியாக இருக்கவே மறந்துவிடுகின்றனர். அவர்கள், என்ன செய்தால் மன அழுத்தத்தை குறைக்க முடியும் தெரியுமா? 

Creative Ways To Reduce Stress And Feel Happy: மன அழுத்தம் என்பது இப்போது பலரது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விடுகிறது. பிறரிடம் மனம் விட்டு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் மறப்பதால், நமக்காக வாழாமல் சுற்றி இருப்பவர்களுக்காக வாழ்வதால் இந்த மன அழுத்தம் எனும் பேய் நம்மை வாட்டி வதைக்கிறது. இதனிடமிருந்து தப்பிக்க நாம் 8 கிரியேட்டிவான வழிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை என்னென்ன தெரியுமா? 

1 /8

ஒரு நாளைக்கு ஏதேனும் சிறியதாக பிறருக்கு நல்லது செய்யலாம். உங்கள் நண்பரை சர்ப்ரைஸ் செய்யலாம், குடும்பத்தினருக்கு சின்ன பொருட்கள் எதையேனும் வாங்கித்தரலாம். 

2 /8

வாரத்தில் ஒரு நாள், போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களின் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். அந்த நாளில் எழுதுவது, படிப்பது, பிறருடன் பேசுவது போன்ற விஷயங்களை செய்யலாம். 

3 /8

வாரத்தில் ஒரு நாள், போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களின் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். அந்த நாளில் எழுதுவது, படிப்பது, பிறருடன் பேசுவது போன்ற விஷயங்களை செய்யலாம். 

4 /8

தியானம் செய்யலாம், அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடன் உரையாட வேண்டும். செடி வளர்ப்பதில் ஆர்வம் இருந்தால் அதையும் செய்யலாம். 

5 /8

உங்களுக்கு பிடித்த குத்து பாடலை போட்டு யாரும் பார்க்காதது போல நடனமாடுங்கள். நல்ல தாள இசைக்கொண்ட பாடல்கள், நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கும். 

6 /8

சமைப்பது, நம் மனதை நிதானப்படுத்தும் ஒரு செயலாகும். எனவே, உங்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் போது உங்களுக்கு பிடித்ததை வீட்டிலேயே செய்து பழகுங்கள். 

7 /8

படைப்பாற்றலை தூண்டும் ஏதேனும் ஒரு செயலில் இறங்குங்கள். பெயிண்டிங் செய்வது, கதை எழுதுவது உள்ளிட்டவற்றை செய்யலாம். 

8 /8

உங்கள் நாள் எப்படி சென்றது என்பதை எழுதலாம். அந்த நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த தருணங்கள், நீங்கள் சந்தித்த நல்ல மனிதர்கள் ஆகியவற்றை அதில் நினைவுக்கூறலாம்.