காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதயம், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணரான நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் நேனே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். காலை உணவில் சாப்பிடக்கூடாத விஷயங்களைப் பற்றி மருத்துவர் நேனே ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இதயம், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணரான நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் நேனே காலை உணவில் சாப்பிடக்கூடாதவை குறித்து விளக்கியுள்ளார்.
காலை உணவில் சாப்பிடக்கூடாதவை: இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள டாக்டர் நேனே, காலை உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வது விஷத்திற்கு சமமாகும் என குறிப்பிட்டுள்ளார். இதில் வெள்ளை பிரெட், பழச்சாறு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இனிப்பு தயிர், இனிப்பு சேர்க்கப்பட்ட ரெடு டு ஈட் வகை தானியங்கள், போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பழச்சாறு: பழச்சாறுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், ஜூஸாக சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்காமல் போகும். அதோடு, காலை உணவுடன் பழச்சாறு குடிப்பது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இதற்கு பதிலாக பழங்களை சாப்பிட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி: தப்படுத்தப்பட்ட இறைச்சி உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, காலை உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடவே கூடாது.
லஸ்ஸீ என்னும் இனிப்பு தயிர்: தினமும் காலை உணவாக இனிப்பு தயிர் சாப்பிடுவது நீரிழிவு நோய்அதிகரிக்கும். சிலருக்கு காலை உணவிடன் லஸ்ஸி அல்லது இனிப்பு தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இது உடல் பருமனை அதிகரிக்கிறது, இது பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே காலை உணவில் இனிப்பு தயிர் சாப்பிடக்கூடாது.
இனிப்பு சேர்க்கப்பட்ட தானியங்கள் - சிலர் காலை உணவில் ரெடு டு ஈட் வகை தானியங்களை சேர்த்துக் கொள்வார்கள். இதில் சர்க்கரை அதிகம் உள்ளது. இந்த வகை உணவு நீண்ட காலத்திற்கு நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இதன் மூலம், அதிக கார்போஹைட்ரேட் உடலைச் சென்றடைகிறது. இதன் காரணமாக பசியின்மை மற்றும் பிபி இரண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.