ஆடியில் அனைத்து சக்தியையும் தன்னுள் அடக்கிய அன்னை அம்பிகைக்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு!

Blessings From Trinity Goddess : ஆடி மாதத்தில் விஷ்ணு உட்பட பல தெய்வங்களும் யோக நித்திரைக்கு சென்றுவிடுவதால், அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால் இந்த மாதத்தில் அன்னை வழிபாடு முக்கியமானது...

ஆடி மாதத்தில் கோடைக்காலம் முடிவுக்கு வந்து, மழைக்காலம் தொடங்கும் காலமானதால், பருவகால நோய்கள் அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க அன்னையை ’மாரி’ அம்மனாக வழிபடுவது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்...

1 /9

பெண் சக்தியை சக்திரூபமாக வழிபடும் சாக்த வழிபாடு இந்து மதத்தில் முக்கியமான ஒன்று. அந்த வகையில், பெண் தெய்வங்களை வழிபடும் மாதம் ஆடி மாதம் ஆகும்

2 /9

இறைசக்தி சக்தி ரூபமாக இருக்கிறது, அதில் அம்மனை பல்வேறு ரூபங்களில் வழிபடுகிறோம். சிவனின் மனைவி பார்வதி அன்னையையும், விஷ்ணுவின் மனைவியான லட்சுமி தேவியையும், பிரம்மாவின் சக்தியான சரஸ்வதி தேவியையும் ஆடி மாதத்தில் வழிபடுகிறோம்

3 /9

அன்னை சக்தி, அன்புக்கு அடிமையாபவள், தவறை தண்டிக்கும் ரீங்காரி என்றால், தன்னை நாடி வந்தவர்களை காக்கும் ரட்சகி...

4 /9

சக்தியின் பூரண ஸ்வரூபமான அன்னைக்கு மஞ்சளாடை விருப்பமானது. பட்டாக பகட்டான ஆடை மட்டுமா அன்னைக்கு விருப்பமானது? மஞ்சளை காப்பாக ஆடையாக அணிவதே அன்னைக்கு உகந்த ஆடையாம்...

5 /9

அன்னையை எப்படி வணங்கினாலும் அருள் பாலிப்பார். ஒவ்வொரு பகுதியிலும், ஊரிலும் அங்கு இருப்பதற்கு ஏற்ப அன்னைக்கு பெயர் உண்டு. மதுர காளியாக இருந்தாலும் பத்ரகாளியாக இருந்தாலும், வேறுபாடு அன்னை இருக்கும் இடத்தில் தான், அவருடைய அருளில் எந்தவித வேறுபாடும் இல்லை

6 /9

பொதுவாகவே அன்னைக்கு சிவப்பு நிறம் மிகவும் உகந்தது என கூறப்படுவதற்கு காரணம், இரத்தம் சிவப்பு நிறம், உயிர் கொடுக்கும் அன்னைக்கு செந்நிறம் உகந்தது

7 /9

நோய்களை விரட்டும் வேப்பிலையை விரும்பும் வேப்பிலைக்காரி அன்னை பார்வதி

8 /9

அன்னை வழிபாட்டில் சக்தி சக்கரம், மேரு வழிபாடு முக்கியமானது

9 /9

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது