அரவிந்த் சாமி மாதிரியே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோஸ்!

Actor Arvind Swamy Daughter : கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், அரவிந்த் சாமி. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரை பார்த்திருக்கிறீர்களா? இங்கு பார்ப்போம்!

Actor Arvind Swamy Daughter : தமிழ் திரையுலகில், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் அரவிந்த் சாமி. 90ஸ் இளைம்பெண்களுக்கு கணவு கண்ணனாக இருந்த இவர், தொடர்ந்து சாக்லேட் பாய் கதாப்பாத்திரங்களிலேயே நடித்திருந்தார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதில், முதல் பெண்ணின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

90கள் மற்றும் 2000ம் காலங்களில் பல இளம் பெண்களின் கனவில் வந்து தொல்லை செய்த நாயகன், அரவிந்த் சாமி. தொடர்ந்து கதாநாயகனாக நடித்து கொண்டுருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து போனது. 

2 /7

மருத்துவராக ஆக வேண்டும் என்று நினைத்த இவர், மாடலிங்கில் ஈடுபாடு காட்னார். இதையடுத்து இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே, மணி ரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார்.

3 /7

2005ஆம் ஆண்டு ஒரு பெரிய நிறுவனத்திற்கு அதிபதியாக மாறிய அவர் அதே ஆண்டில் ஒரு பெரும் விபத்தில் சிக்கினார். இதனால், அவரது முதுகுத்தண்டில் அடிப்பட்டு உடலின் ஒரு பகுதி செயலிழந்து போனது. 

4 /7

உடல் எடை அதிகமாகி, முடியிழந்து போயிருந்த இவர், தொடர்ந்து 15 கிலோ எடையை குறைத்தார். மீண்டும் சினிமாவில் கம்-பேக் கொடுக்க நினைத்த இவருக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது ‘தனி ஒருவன்’ திரைப்படம். இந்த படம், அவருக்கு பெரிய வெற்றியை தேடித்தர தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது, கார்த்தியுடன் மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார்

5 /7

அரவிந்த் சாமிக்கு, ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். இவருக்கு ருத்ரா, ஆதிரா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், மகளுக்கு 28 வயதும் மகளுக்கு 24 வயதும் ஆகிறது. 

6 /7

ஆதிரா சாமியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

7 /7

ஆதிரா சாமி, பிரபல சமையல் கலைஞராக வலம் வருகிறார். தற்போது இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.