ஜப்பான் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தி சொன்ன முக்கிய தகவல்!

Japan Trailer Launch: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.  படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

1 /7

கார்த்தி திரையுலகில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ஜப்பான் ட்ரைலர் வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.  

2 /7

இந்த விழாவில் பேசிய கார்த்தி, நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை  எனக்கு கொடுத்திருக்கிறது.   

3 /7

இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா.   

4 /7

கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.  

5 /7

பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி.   

6 /7

இந்த நிகழ்வில்  தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி..  

7 /7

25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும், தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருக்கிறேன். இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல.. தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன் என்று கூறினார்.