43 வயது நடிகர் கருணாகரனுக்கு இவ்வளவு பெரிய மகளா?! வைரலாகும் புகைப்படங்கள்..

Karunakaran Daughter Meghnaa Photos : தமிழ் நடிகர் கருணாகரணுக்கு, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள், “இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா..” என வாயை பிளந்து வருகின்றனர். 

Karunakaran Daughter Meghnaa Photos : தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வலம் வருபவர், கருணாகரன். பல துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய புகழை தேடித்தந்தது இவரது முதல் படமான, சூது கவ்வும்தான். இந்த படத்தின் இயக்குநர் நளன் குமாரசாமி குரும்படம் படத்திற்காக அவரை சந்தித்த போது, இவருக்கு பட வாய்ப்பு கிட்டியது. தற்போது, ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு 43 வயதுதான் ஆகிறது. ஆனால், இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். அதிலும் மூத்த மகள், தற்போது பட்டப்படிப்பையே முடித்திருக்கிறார். அவரது புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /8

சூது கவ்வும் படத்தில், அரசியல்வாதியின் மகனாக நடித்து பிரபலமானவர் கருணாகரன். புது டெல்லியில் பிறந்து, திருச்சியில் வளர்ந்த இவர், இயக்குநர் நளன் குமாரசாமியை சந்தித்த பின்பு பட வாய்ப்புகள் பலவற்றை பெற்றார். இந்த படத்திற்கு முன்னரே பீட்ஸா, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

2 /8

கருணாகரனுக்கு இன்னும் பெரிய கதவை திறந்து விட்டது, யாமிருக்க பயமே திரைப்படமும் ஜிகர்தண்டா படமும்தான். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக சேர்ந்து நடித்த இவர், ரஜினியுடன் லிங்கா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 

3 /8

சினிமா உலகிற்கு வந்த சில நாட்களிலேயே,50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கடந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்த 6 திரைப்படங்கள் வெளியானது. 

4 /8

நடிகர் கருணாகரன், தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

5 /8

கருணாகரனின் முதல் மகள், மேக்னா என கூறப்படுகிறது. இவர், வெளிநாட்டில் கட்டிடக்கலை படிப்பு பயின்று வந்துள்ளார். 

6 /8

சமீபத்தில் கருணாகரனின் மகள், ஒரு பதிவை வெளியிட்டார். அதில், அவர் பட்டம் பெற்றுள்ள புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

7 /8

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என வாய்பிளந்து வருகின்றனர். 

8 /8

இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.