Affordable Dual-Channel ABS Bikes: பிரேக்கிங் செய்யும் போது வாகனத்தின் சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்க வாகனங்களில் ஏபிஎஸ் அல்லது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
பைக்குகளில் இரண்டு வகையான ஏபிஎஸ் வழங்கப்படுகிறது - ஒற்றை சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ். செலவுக் குறைப்புக்காக, நிறுவனங்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்குகின்றன
டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் வரும் 5 மலிவான பைக்குகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். ஒற்றை சேனல் ஏபிஎஸ்ஸை விட இரட்டை சேனல் ஏபிஎஸ் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.
யமஹா FZ 25: யமஹா எஃப்இசட் 25ல் டூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது 249சிசி, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் கொண்ட பைக் இது
பஜாஜ் பல்சர் N160: இது இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்ட இந்தியாவில் மிகவும் மலிவான மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. பல்சர் என்160 ஆனது 164.82சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் இன்ஜினுடன் வருகிறது.
TVS Apache RTR 200 4V: இந்தியாவில் இரட்டை சேனல் ABS வழங்கும் முதல் வெகுஜன சந்தை மோட்டார்சைக்கிள் இதுவாகும். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். இது 197.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜினைப் பெறுகிறது
பஜாஜ் பல்சர் என்எஸ்160 இரட்டை சேனல் ஏபிஎஸ் விலை ரூ.1.35 லட்சம்
பஜாஜ் பல்சர் என்எஸ்200: பஜாஜ் சமீபத்தில் பல்சர் என்எஸ்200ஐ மேம்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.47 லட்சம்