Chennai ராணுவ அகாடமியில் ஆப்கன் பெண் அதிகாரிகள் பயிற்சி

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தின் மகளிர் பிரிவு அதிகாரிகள் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

நட்பு, அண்டை நாடுகளின் நிலையான, அமைதியான வளர்ச்சிக்கு உதவுவதற்கான இந்தியாவின் கொள்கையின் செயலாக்கத்தின் மற்றுமொரு உதாரணம்.
நிதி, உள்கட்டமைப்பு, ராணுவம் மற்றும் மருத்துவ உதவிகளை பிற நாடுகளுக்கு இந்தியா வழங்குகிறது. வெளிநாட்டு ராணுவங்களின் கேடட்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சி அளிப்பதன் மூலம் இந்திய இராணுவம் இத்தகைய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் வகிக்கிறது.

Also Read | India-Pakistan war 50 ஆண்டு நிறைவடைவு, கோவையில் விமான சாகசக் காட்சிகள்

1 /6

6 வார பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண்கள் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2 /6

இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான பணிகளில் நியமிக்கப்படுகின்றனர்.  ராணுவத் தளவாடங்கள், மனித வளங்கள், வானொலி தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கிளைகளில் பெண் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.

3 /6

சென்னையில் உள்ள OTA இல், ஆயுதங்களைக் கையாளும் அதிகாரிகள்

4 /6

தந்திரோபாயம், தகவல் தொடர்பு, ராணுவ நிர்வாக திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகின்றன

5 /6

இந்திய ராணுவம் 2017 முதல் ஆப்கானிய ராணுவத்தை சேர்ந்த பெண்களுக்கு  இதுபோன்ற சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது. இது நான்காவது ஆண்டாக தற்போதும் தொடர்கிறது

6 /6

2020 க்குள் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளில் 10% பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று ஆஃபன் அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அது, இதுவரை சாத்தியமாகவில்லை. தற்போது ஆப்கானிய படைகளில் சுமார் 4,500 பெண்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.   இது அவர்களின் மொத்த ராணுவ பலத்தில் 1.4% மட்டுமே.