12 ஆண்டுக்குப் பிறகு குருவின் அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்

Jupiter Retrograde: தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி வியாழன். அதன் வக்ர நிலை சிலருக்கு சுப பலன்களைத் தரும். வியாழனின் வக்ர போக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இறுக்கம் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

ஜோதிட பஞ்சங்கத்தின் படி, தேவ குரு வியாழன் செப்டம்பர் 04 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, வியாழன் வக்ர நிலை காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் வணிகத் துறைகளில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தரும். குரு வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள்'என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /7

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: செப்டம்பர் 4 முதல், குரு மேஷத்தில் வக்ர நிலையில் நகர்ந்து வருகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அற்புத நிகழ்வு நடந்துள்ளது. மேலும் குரு சுமார் நான்கு மாதங்கள் இந்த நிலையில் இருந்து டிசம்பர் 31க்கு பிறகு வக்ர நிவர்த்தி அடைவார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கும் நிறைய பண பலன்களை தரும். 

2 /7

மேஷம்: உங்கள் வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னோக்கி பயணிப்பதால், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இருப்பினும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஐந்தாவது வீட்டில் இந்த கிரகத்தின் பார்வை விழிவதால் உங்கள் அதிர்ஷ்டத்தை எழுப்பலாம் மற்றும் திடீர் நிதி ஆதாயத்தைக் கொண்டு வரும். இந்த நேரம் இனிமையாக இருக்கும்.

3 /7

சிம்மம்: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலை குரு பயணிக்கிறார். நிலம், கட்டிடம் ஆகியவற்றில் லாபம் உண்டாகும். நீங்கள் உங்கள் வேலையில் முன்னேறி, ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் நிதி நிலைமை இன்னும் வலுவடையும். தொலைதூரப் பயணத்திற்கான வாய்ப்பும் அமையும். உங்கள் தந்தையுடனான உறவை வலுவாக வைத்திருங்கள்.

4 /7

துலாம்: வியாழன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பது வணிக லாபத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் திருமண வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றும். இருப்பினும், வருமானத்துடன் செலவுகளும் அதிகரிக்கும். இருப்பினும், குடும்ப வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். கூட்டுப் பணிகளில் நல்ல பணப் பலன்களைப் பெறுவீர்கள்.

5 /7

தனுசு: தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் வியாழன் பின்னோக்கி செல்வது உங்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் காணப்படும். பெரிய வேலைகளுக்குப் பொறுப்பேற்பீர்கள்.

6 /7

மீனம்: உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டில் வியாழனின் பிற்போக்கு இயக்கம் உங்கள் பேச்சு மற்றும் உறவுகளை மேம்படுத்தும். பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றமும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.