புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... ராகு, கேது, குரு, சனி பெயர்ச்சிகளால் நல்ல காலம்

Sani Peyarchi Palangal: புத்தாண்டு 2025 -இன் மிகவும் அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை? யாருக்கு இந்த ஆண்டு நல்ல காலம்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Guru Peyarchi, Sani Peyarchi Peyarchi Palangal: நாளை புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. ஜோதிட ரீதியாக, வரும் புத்தாண்டு அதாவது 2025 மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றும். இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு, கேது உட்பட பல முக்கிய பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. 2025-ம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் மாறுதல்களால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. 2025 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என இங்கே காணலாம். 

1 /11

அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமன கிரகமான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். மீன ராசியில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

2 /11

குரு பெயர்ச்சி: சுப கிரகமாக உள்ள குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வக்ர நிவர்த்தி அடைவார். அதன் பிறகு மே மாதம் குரு மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவார். சனி பெயர்ச்சியை போலவே இதுவும் 2025 ஆம் ஆண்டின் ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்பட்கின்றது.

3 /11

Rahu, Ketu Peyarchi: நிழல் கிரகமான ராகு அக்டோபர் 30, 2023 முதல் மீனத்தில் உள்ளார். 2024ல் ராகு பெயர்ச்சி ஆகவில்லை. 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ராகு கும்ப ராசியில் பெயர்ச்சி ஆவார். 2025 ஆம் ஆண்டு கேது மே 18 ஆம் தேதி சிம்மத்தில் பெயர்ச்சி ஆவார். 

4 /11

2025 ஆம் ஆண்டு சனி பகவான், குரு பகவான், ராகு, கேது உட்பட பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. இவற்றிம் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும், இவர்களது வாழ்வில் இது பொற்காலமாய் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /11

மேஷம்: 2025 ஆம் ஆண்டில், குரு அருளால், உங்களுக்கு நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழிலிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்விக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வேலை கிடைக்கலாம். வேலையில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. தொழில் பயணங்களின் போது புதிய தொழில் வாய்ப்புகள் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

6 /11

ரிஷபம்: 2025-ம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி, ராகு-கேது, குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றம் விசேஷமாக கருதப்படுகிறது. சனி பெயர்ச்சி தடைபட்ட காரியங்களில் வெற்றியை அளிக்கும். குரு பெயர்ச்சியால் நிதி நிலை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவுகள் வலுவடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

7 /11

மிதுனம்: சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்ச்சியின் தாக்கத்தால் வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அர்வம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயண வாய்ப்புகள் அதிகமாகும். புதிய நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட இந்த வருடம் வாய்ப்பு கிடைக்கும்.

8 /11

கடகம்: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஆகியவற்றின் காரணமாக  கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 2025-ல் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் மூலம் வெற்றி கிடைகும். நிதி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

9 /11

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிதி ஆதாயத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ராகுவின் சாதக நிலையால் படைப்பாற்றல் அதிகரிக்கும். ஒரு புதிய கலையை கற்றுக்கொள்ள அல்லது புதிய திட்டத்தை தொடங்க இது ஒரு நல்ல நேரம். சனி பெயர்ச்சி தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், படிப்பு அல்லது வேலை எதுவாக இருந்தாலும், நீங்கள் வெளிநாடு செல்ல நினைத்தாலும், இந்த ஆண்டு அவை அனைத்தும் நடக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்

10 /11

கும்பம்: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு மற்றும் கேதுவின் பெஅயர்ச்சிகள் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானவையாக கருதப்படுகின்றன. புதிய ஆண்டில் வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்களில் வெற்றி பெறுவீர்கள். அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.