புத்தாண்டு ராசிபலன் 2024: இந்த ராசிக்காரர்களுக்கு உச்ச ராஜயோகம், பொற்காலம்

2023 ஆம் ஆண்டு நிறைவேற இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. 2024ஆண்டு பிறக்கப்போகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. நல்ல வேலை யாருக்கு கிடைக்கும்? நிதி நிலைமை எப்படி இருக்கும் என்று பலரும் யோசிக்கிறார்கள்.அதன்படி 2024 ஆம் ஆண்டு முதல் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

 

1 /6

மேஷம்: 2024ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பண வருமானம் பல வழிகளிலும் வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். புது முயற்சிகள் கைகூடும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் இட மாற்றமும் ஏற்படும்.  

2 /6

ரிஷபம்: 2024ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். புது முயற்சிகள் கை கூடும். தொட்ட காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். முடங்கிய தொழில்கள் மீண்டு அதிக லாபம் தரும். 2024ஆம் ஆண்டில் வீடு, மனை, வாங்கும் யோகம் அமையும்.  

3 /6

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமாக அமையப்போகிறது. வேலையில் மாற்றம் முன்னேற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வு தேடி வரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.  

4 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும். பதவிகள் தேடி வரும். தலைமை பொறுப்பு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்த தொழில் கூட்டு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  

5 /6

கன்னி: வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாகனம், வீடு மாற்ற வாய்ப்பு உண்டு. புதிய வீடு வங்குவீர்கள். பணவரவு சீராக இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நிதானத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய தொழில் முயற்சிகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.