இந்தியா முழுவதும் ஏர்டெல் நிறுவனம் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. பல விதமான ரீசார்ஜ் திட்டங்களை தற்போது வழங்கி வருகின்றனர்.
தற்போது ஏர்டெல் 365 நாட்கள் செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தினர். இதனால் பல பயனர்கள் BSNLக்கு மாறினர். இதனால் 2 நிறுவனங்களும் கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஏர்டெல் ரூ.1,999க்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற இலவச அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் பெறலாம்.
ரூ.1,999 திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 2ஜிபி அதிவேக டேட்டாவை பெறலாம். மொத்த டேட்டா முடிந்த பிறகு 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, Wynk Musicக்கான இலவச சந்தாவை பெறலாம். குறைந்த டேட்டா தேவைப்படுபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.