பக்கவாதம் ஏற்படபோவதை உணர்த்தக்கூடிய முக்கியமான 4 அறிகுறிகள்!

மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்பட்டு ஒருவருக்கு திடீரென்று பக்கவாதம் பிரச்சனை ஏற்படுகிறது.

 

1 /4

முகம், கை அல்லது கால் போன்ற உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் உணர்வின்மை ஏற்படும் மற்றும் பலவீனம் அடைந்தது போன்று தோன்றும்.

2 /4

பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்னர் பேசுவதில் தடுமாற்றம் ஏற்படும், திடீர் குழப்பம் அல்லது பேச்சை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும்.

3 /4

பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்னர் திடீரென ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ பார்வையில் குறைபாடு ஏற்படும்.

4 /4

திடீரெனெ தலைச்சுற்றுவது, உடல் சமநிலையில்லாமல் காணப்படுதல் போன்றவை பக்கவாதத்தின் முக்கியமான அறிகுறியாக இருக்கிறது.