கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
தயிர் அல்லது சீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களுடன் பழங்களை கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், இவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மாவுச்சத்து மற்றும் அமில உணவுகளில் வினிகர் அல்லது சிட்ரஸ் பழச்சாறுகள் இருக்கும். இவை சுவையை அதிகரிக்கிறது. ஆனால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
முலாம்பழங்கள் கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் நல்லது. இருப்பினும், இந்த பழத்தை ஏதேனும் பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு மற்றும் வயிற்று அஜீரணம் ஏற்படலாம்.
வெயில் காலத்தில் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்கள் குடிக்க தோன்றும். ஆனால் பானங்களை உணவுடன் சேர்த்து குடிக்கும் போது செரிமான செயல்முறையை மெதுவாக்கும்.
வாழைப்பழம் போன்ற இனிப்பு தன்மை கொண்ட பழங்களுடன், ஆரஞ்சு அல்லது அன்னாசி போன்ற அமில தன்மை கொண்ட பழங்களை சாப்பிட கூடாது. இவை அஜீரண நிலையைத் தரும்.