Bank Holidays in January 2023: ஜனவரி 2023 மாதத்தில் வங்கிகள் 3, 4 அல்லது 5 நாட்களுக்கு அல்ல, மொத்தம் 14 நாட்களுக்கும் வங்கி மூடப்படும். இந்த மாதம் வங்கியில் ஏதாவது வேலை இருந்தால் கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்கானது.
Bank Holidays 2023: ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்தாலே வங்கிகளுக்கு எந்த நாளில் விடுமுறை என்று வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ஞாயிறு காரணமாக வங்கிகள் செயல்படாது.
ஜனவரி 28 - நான்காவது சனிக்கிழமையன்று வங்கி மூடப்படும்
ஜனவரி 2 ஆம் தேதி மிசோரமில் வங்கிகள் மூடப்படும்.
ஜனவரி 11 -மிஷனரி தினத்தை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கி மூடப்படும்.
ஜனவரி 14 - மகர சங்கராந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அசாமில் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 25 - இமாச்சலப் பிரதேசத்தின் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 26 - குடியரசு தினத்தையொட்டி வங்கி மூடப்படும்
ஜனவரி 31 - அசாமில் வங்கிகளுக்கு விடுமுறை.