Psychological Signs: 18 முதல் 34 வயதிலுள்ள இளைஞர்களே அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள். கவலை, கோபம் மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற சில அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என அர்த்தம்.
Depression Tips: இன்றைய இயந்திர வாழ்க்கையில் மக்கள் அனைவரும் தங்கள் பணியில் ஓயாமலும் உழைக்கின்றனர். எப்போதும் வேலை, அதைசார்ந்த அழுத்தம், குடும்பம் என ஒருவித எதன் மீதும் பற்றின்றி தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு இன்றைய சமூகத்தினர் இடையே மனச்சோர்வு அதிகரித்து வருகிறது. எனவே மனச்சோர்வின் அறிகுறிகள் கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தான் வாழ தகுதி இல்லாத நபர் என்ற எண்ணம் தோன்றலாம்
எனக்கு மட்டும் ஏன் அப்படி நடக்கிறது என்ற கவலை
இதை செய்தால் தவறாகி விடுமோ, அதை செய்தால் தவறாகி விடுமோ என்ற பயம்
மன அழுத்தத்தில் இருப்பதை மற்றவர்கள் கவனிப்பார்கள் என்ற கவலைகள்
கவலையை மறைக்க மது அருந்த வேண்டும் என்ற உணர்வு.
சுய வெறுப்பு தான் மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
உலகம் முழுவதும் 34 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல், தவறான முடிவினை தேர்வு செய்கின்றனர்.
உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.