7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, 4% டிஏ உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்

7th Pay Commission DA Hike: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு கிடைத்துள்ளது. தமிழக அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜனவரி 1, 2023 முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஊழியர்கள் பரிசாகப் பெறுவார்கள். இந்த உயர்வை ஆண்டின் முதல் நாளான நேற்று அரசு அறிவித்தது.

1 /5

தமிழக அமுதல்வர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் கூடுதல் டிஏ வழங்கப்படும்.

2 /5

இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இனி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34-க்கு பதில் 38 சதவீதம் வழங்கப்படும்.

3 /5

இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தமிழக முதலர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனுடன், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும் மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 

4 /5

மாநில அரசின் இந்த நடவடிக்கையால், அரசு கருவூலத்துக்கு ரூ.2,359 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி உயர்வை புத்தாண்டு பரிசு என்று குறிப்பிட்ட முதல்வர், மக்களின் நலன் மற்றும் செழிப்புக்கான அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

5 /5

மத்திய அரசும் விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தவுள்ளது. ஜனவரி மாதத்திலேயே ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்பை வெளியிடக்கூடும். அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.