இந்த 5 அறிகுறிகளும் உங்களுக்கு இருந்தா Vitamin D குறைபாடு இருக்குனு அர்த்தம்

இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. இவை தேவையான அளவு சூரிய ஒளியை கிரகித்துகொள்வ தில்லை என்பதால் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்துவருகிறது. உடல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி குறைபாடு உடலில் பல்வேறு உபாதைகளையும் உண்டாக்குகிறது.
  • Jul 28, 2020, 15:12 PM IST

குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகின்ற பொழுது என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் நம் உடலில் ஏற்படுகின்றன என்று இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

1 /5

எலும்பு வலி மற்றும் குறைந்த முதுகுவலி ஆகியவை இரத்தத்தில் வைட்டமின் டி அளவு போதுமானதாக இல்லை என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். ஒரு ஆய்வு 9,000 க்கும் மேற்பட்ட வயதான பெண்களில் வைட்டமின் டி அளவிற்கும் முதுகுவலிக்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்தது.

2 /5

நீங்கள் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு இருக்கக் கூடும். வைட்டமின் டி சத்து குறைவதால் உங்கள் பெரும்பாலான நேரம் நீங்கள் மிகவும் சோர்வாகவே உணர்வீர்கள்.

3 /5

வைட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தசை பலவீனம் அல்லது புண் மற்றும் வலி தசைகள் கூட இருக்கலாம்.

4 /5

உங்கள் உடலில் வைட்டமின் டி சத்து குறைவதால் நீங்கள் மனச்சோர்விற்கு ஆளாகலாம்.

5 /5

சிலருக்குத் காரணமில்லாமல் அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஆகியவை முடி உதிர்வுக்கு முதன்மையான காரணங்களாக இருக்கின்றன. வைட்டமின் டி சத்து குறைவதால் முடி உதிர்வு உண்டாகலாம்.