உடலில் எக்கச்சக்க கொலஸ்ட்ரால் சேர்ந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம். இந்த வீட்டு வைத்தியம் நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால் கொலாஸ்ட்ரால் உங்க பக்கமே நெருங்காது. இதுபற்றி பார்க்கலாம்.
இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற இருதய நிலைகளுக்கு அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் ஒரு முக்கிய ஆபத்தாக மாறுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும். வீட்டு பொருட்கள் வைத்து சரிசெய்வதுபோன்று உடல் ஆரோக்கியம் பெற முடியும். அதுபோன்றுதான் இந்த குறிப்பிட்ட வீட்டு வைத்தியமும் உங்கள் கொலஸ்ட்ராலை கண்மூடி திறப்பதற்குள் குறைக்க உதவுகிறது. வீட்டு வைத்தியம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
தியானம் மூச்சுபயிற்சி: மன அழுத்தம் ஏற்படுவதால் உடல் கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்கிறது. மன அழுத்ததிலிருந்து விடுபட தினமும் தியானம் மற்றும் மூச்சுபயிற்சி மேற்கொள்ள வேண்டும். தியானம் மன அமைதிப்படுத்தும். மூச்சுபயிற்சி அன்றைய நாளை தெளிவாக செயல்பட உதவுகிறது.
சர்க்கரை அளவு: அதிக அளவு சர்க்கரை உள்ள உணவு மற்றும் திண்பண்டங்கள் சாப்பிடுவதை முற்றிலும் குறைக்க வேண்டும். உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்க சர்க்கரை முக்கியமாக திகழ்கிறது. எனவே சர்க்கரை இருக்கும் உணவு மற்றும் திண்பண்டங்கள் உண்பதை குறைத்து கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
உடற்பயிற்சி :உடற்பயிற்சி என்பது உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த உடற்பயிற்சி நமக்கு முக்கிய ஆற்றல் அளிக்கிறது. உடற்பயிற்சி செய்தல் நல்ல கொழுப்பை அதாவது (HDL) அதிகரிக்க உதவும். மேலும், கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது.
தண்ணீர்: ஒரு மனிதர் நாளொன்றுக்கு உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதில்லை.அலட்சியமாக விட்டுவிடுகிறீர்கள். எனவே கொலஸ்ட்ரால் குறைக்க தண்ணீ மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கிரீன் டீ : கிரீன் டீயில் கேடசின்கள் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உடலில் கெட்ட கொழுப்பை எரித்து நல்ல அரோக்கியத்தை அளிக்கிறது. தினமும் காலை மற்றும் மாலை இருவேளை க்ரீன் டீ குடிப்பது கொலஸ்ட்ராலை விரைவாக குறைக்க முடியும்.
பூண்டு : பூண்டு உடல் கொலஸ்ட்ராலை குறைக்கும் சிறந்த மூலப்பொருட்களாகும். நாளொன்றுக்கு பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடலில் ஆரொக்கியத்தைக் காணலாம்.
ஒமேகா-3 கொழுப்பு :மீன்களில் காணப்படும் ஒமேகா -3 கொழுப்பு உடலில் கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. குறைந்தது வாரத்திற்கு 2 நாட்கள் மீன்கள் சாப்பிடுவதை பழக்கமாக மாற்ற முயற்ச்சிக்கவும்.
ஃபைபர் அதிகரித்தல்:: ஃபைபர் இருக்கும் பொருட்கள் உடலில் ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உணவாக சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும். ஓட்ஸ், பீன்ஸ், பருப்பு மற்றும் பழங்கள் போன்ற உணவுகள் கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது.. கொலஸ்ட்ரால் குறைய 25-30 கிராம் நிறைந்த ஃபைபர் பொருட்கள் சாப்பிட வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.