தினமும் இரவில் வெல்லம் சேர்த்த பால்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாம் கண்டிப்பாக உணவில் பாலை சேர்த்துக் கொள்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த பால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே போல் வெல்லமும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.

இரவில் பாலில் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். அதன் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். உடலுக்கு ஆற்றலை வழங்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகள் பலவீனத்தை போக்கவும் என இதன் நன்மைகளை பெரும் பட்டியலகாவே இடலாம்.

1 /9

பால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கால்ஷியம் நிறைந்த குடிப்பதால் எலும்புகள் வலுவடைவது மட்டுமின்றி உடலில் உள்ள பலவீனம் நீங்கும்.  மேலும், இதில், இரும்புச்சத்து, பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

2 /9

வெல்லம் உடலுக்கு  ஆற்றலை அள்ளி வழங்கும். நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதம் உள்ளது. வெல்லம் சாபிடுவதால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது. 

3 /9

வெல்லம் சேர்த்த பால்: இரவில் தூங்கும் முன் சூடான பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆயுர்வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலில் வெல்லம் சேர்த்து அருந்துவதால் பாலின் சுவையை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்

4 /9

இளமையை பாதுகாக்க: சருமத்தை அழகாகவும் இளமையாகவும் பராமரிக்க, வெல்லம் ஒரு ஆரோக்கிய டானிக் மட்டுமல்ல அழகு டானிக்கும் கூட. வெல்லம் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் கொலாஜனை அதிகரிக்கின்றன. இது சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

5 /9

செரிமான ஆரோக்கியம்: செரிமானமின்மை காரணமாக, வாயு, அஜீரணம், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பாலை ஜீரணிப்பது மிகவும் கடினம். அவர்கள், தினமும் வெல்லத்துடன் பால் உட்கொள்ளத் தொடங்கலாம். வெல்லம் கலந்த பால் வயிற்றை எளிதில் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. தவிர, செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளும் நிவாரணம் கிடைக்கும்.

6 /9

எலும்புகள் ஆரோக்கியம்: பாலில் கால்சியம் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் வெல்லத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், பலன்கள் மேலும் அதிகரிக்கும். வெல்லத்தில்  உள்ள பாஸ்பரஸ் எலும்புகளின் பலவீனத்தை அகற்ற உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலி நீங்க வெல்லம்  சேர்த்த பாலை அருந்த மறக்காதீர்கள்.

7 /9

இரத்த சோகை:  இரத்த சோகை பிரச்சனை நீங்க தினமும் ஒரு கிளாஸ் வெல்லம் சேர்த்த பால் உட்கொண்டால், இந்த பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். வெல்லத்தில் இரும்புச்சத்து  ஏராளமாக உள்ளது. இது ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது, இது உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

8 /9

தூக்கமின்மை நீங்கும்:  தூக்கமின்மை மற்றும் மன அழுத்த பிரச்சனைக்கு தீர்வு காண, இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான வெல்லம் சேர்த்த பாலை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கவும், ஆழ்ந்த மற்றும் இனிமையான தூக்கத்தைப் பெறவும் உதவும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.