கோடையில் மாங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

Raw Mango Health Benefits: சிலருக்கு மாங்காயின் பெயரைக் கேட்டாலே வாயில் நீர் வரும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாங்காய் கோடை காலத்தில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

  • Apr 20, 2023, 22:22 PM IST

 

 

 

 

 

1 /5

இந்திய உணவுகளில் மாங்காய் ஊறுகாயை ருசிக்காதவர்கள் மிகக் குறைவு எனலாம். கோடையில் மாங்காயை சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.  

2 /5

மாம்பழத்தில் காணப்படும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், ரத்த ஓட்டம் ஆகியவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான மாங்கிஃபெரின் இதில் உள்ளது.

3 /5

மாங்காயின் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன, அவை பெரிய உணவு மூலக்கூறுகளை உடைக்க உதவுகின்றன. இதனால் செரிமானம் எளிதாகும்.

4 /5

மாங்காயில் உள்ள சத்துக்கள் உடலின் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. கூடுதலாக, இது கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

5 /5

மாங்காயில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. மாங்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. (குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை)