மார்க் ஆண்டனி படம் செப்.15ம் தேதி வெளியாகுமா? நீதிமன்றம் சொன்னது என்ன?

Mark Antony Release Date: நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

1 /5

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.  

2 /5

ஆனால் அந்த தொகையை விஷால் திருப்பி தராததால் லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது.  வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார்.   

3 /5

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்,  அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை  வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.  

4 /5

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்தார்.  

5 /5

மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளது. படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.